இந்திய சிறுவனை பாராட்டிய பில்கேட்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்
இத்தாலியில் நடைபெற்ற யூத் பிரிட்ஜ் என்னும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பங்குப்பற்றி மூன்று பிரிவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சிறுவனுக்கு உலகின் முன்னணி தொழிலதிபரும்,மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இந்தியாவின் மும்பையை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் அன்ஷூலை டுவிட்டர் பதிவொன்றினையிட்டு பாராட்டியுள்ளார்.
அவர் தனது பதிவில் "எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டில் புதிய இளைஞர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது பற்றி மேலும் அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் அன்ஷூல் பட்" என குறிப்பிட்டு தாமதமாக வாழ்த்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.
Very fun to learn more about the new youth world champion of my favorite pastime. Here’s a belated congratulations, Anshul Bhatt! https://t.co/5OpkmTqhIm
— Bill Gates (@BillGates) September 29, 2022
குவியும் பாராட்டுக்கள்
மேலும், கடந்த மாதம், இத்தாலியில் வைத்து யூத் பிரிட்ஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில், அன்ஷுலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடி இருந்த அன்ஷூல், மொத்தம் மூன்று பிரிவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.
இத்தாலி சென்று சாதனை படைத்த சிறுவன் அன்ஷூலுக்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமானோர் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் இந்திய சிறுவனை பில்கேட்ஸ் பாராட்டியது தொடர்பான டுவிட்டர் பதிவு தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
