அடுத்த மாதம் முதல் அறிமுகமாகவுள்ள சட்டமூலம்..
தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர்களை தடுத்து வைத்து குற்றஞ்சாட்டுவதற்கான சட்டமூலம் ஒன்று அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த சட்டமூலம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மாற்றாக அமையாது. பதிலாக,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை குறிவைத்து, முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த சட்டமூலம் வரையப்படவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
கடுமையான குற்றவாளிகள்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடுமையான குற்றவாளிகள் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய சட்டமூலம், அவர்களை விசாரணைக்காக நீண்ட காலம் தடுத்து வைக்க அனுமதிக்கிறது. அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் மனித கடத்தல் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் நீண்ட சிறைத்தண்டனைகளை இந்த சட்டமூலம் உள்ளடக்கியிருக்கும்.
அதே வேளையில், முன்மொழியப்பட்ட சட்டம் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பறிமுதல் செய்யவும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தயார் நிலையில் உள்ள இந்த சட்டமூலம், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam