முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் தம்பியால் இயக்கப்படும் Whatsapp குழு
முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் தம்பி இளம்பிறையால் Whatsapp குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தன்னை இணைத்துள்ளதாகவும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் வடமாகாணசபைக்கு முதலமைச்சராக வந்தவர், உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதியரசர். எனவே அவரால் என்ன செய்ய முடிந்தது என்ற வினாக்கள் மக்களுக்கு இருக்கின்றது.
நீதிபதி இளஞ்செழியன் ஆளுமைமிக்கவர் தான், ஆனால் அவர் எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் என தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை பார்க்கவும்.