திருக்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள நேருபுரத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதி தப்பியோட்டம்
அத்துடன் லொறியின் சாரதி லொறியுடன் தப்பி சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் ஹிதாயாபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அப்துல் காதர் முகமது அலாவூதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பொத்துவில் ஹிதாயாபுரத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி நேற்று இரவு 7.20 மணியளவில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அக்கரைப்பற்று பகுதியில் இருந்து பொத்துவிலை நோக்கி பயணித்த லொறி ஒன்று நேரு புரத்தில் வைத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு திருக்கோவில் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
