1984இன் பின்னர் மிகப்பெரிய வெள்ளம்.. மூழ்கிய நகரம்!
பதுளை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெலிமடை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இது அப்பகுதியில் 1984ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் இடம்பெயர்வு
இதேவேளை, நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 4 பேரும், தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், 17 மாவட்டங்களில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மையம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |