உலகை உலுக்கவுள்ள நில நடுக்கம்..! இலட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம்
அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த நில நடுக்கம் மற்றும் அதனையடுத்து ஏற்படும் சுனாமியால் 300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2 டிரில்லியன் வரையான சேதங்கள் இதனால் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
மோசமான நிலநடுக்கங்கள்
பொதுவாக நில நடுக்கங்களை கணிப்பது கடினம் என்றாலும், அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பானுக்கு அருகே உள்ள நான்கை பள்ளத்தாக்கில் பாரிய நில நடுக்கம் ஏற்படுவதற்கு 75 முதல் 82 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் அரசாங்கக் குழுவொன்று எதிர்வுகூறியுள்ளது.
கடலுக்கடியில் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நான்கை பள்ளத்தாக்கில் ஒரு டெக்டோனிக் தட்டு மெதுவாக நழுவுகிறது என்றே தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1,400 ஆண்டுகளில், நான்கை பள்ளத்தாக்கில் ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |