மொட்டு தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி: ஐ.தே.க திட்டவட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே மாபெரும் வெற்றியடைந்து ஜனாதிபதிப் பதவியைத் தொடர்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர்
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி தனியாகச் சென்று வேட்பாளரைக் களமிறக்குவதால் சுயாதீன வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
மொட்டுக் கட்சி தனி வழியில் சென்றாலும் அந்தக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வெளிப்படையான ஆதரவை வழங்குகின்றார்கள்.
எனவே, ரணிலின் வெற்றியை எவரும் தடுத்து நிறுத்த முடியாது." என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |