எதிர்காலத்திற்கு பெரிய அபாயம் காத்திருக்கிறது! எலான் மஸ்க் எச்சரிக்கை
எதிர்கால கலாசாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என டுவிட்டரின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஜப்பான் பிரதமரான Fumio Kishida, தனது நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக டுவிட்டர் பதிவின் ஊடாக எச்சரித்திருந்தார்.
குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி
அதாவது, ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துவருகிறது. ஆகவே, ஜப்பான் சமூக நிலைகுலைவின் விளிம்பில் இருப்பதாக எச்சரித்திருந்தார்.
ஜப்பான் பிரதமரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பெரிய அபாயம்
Japan’s falling birth rate is threatening social collapse.
— Mario Nawfal (@MarioNawfal) January 25, 2023
Prime minister Fumio Kishida warned that Japan is on the verge of not being able to function.
Other countries are facing the same problem.
And yet we insist there’s a secret elite trying to reduce population.
Why?
எலான் மஸ்க் குறித்த பதிவில்,எதிர்கால கலாசாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது மக்கள் தொகை வீழ்ச்சியடையுமானால் உலகின் எதிர்காலத்துக்கு அது பெரிய அபாயம் என்னும் அர்த்தத்தில் எலான் மஸ்க் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தின் மக்கள் தொகை குறித்து கவலை தெரிவித்துள்ள எலான் மஸ்குக்கு 10 பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
