வடமராட்சி கிழக்கிற்கு பெரிய பேருந்து..!
பருத்தித்துறையிலிருந்து கெவிலுக்கு செல்வதற்கு 54 ஆசனங்கள் கொண்ட பெரிய பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை கேவில் வரையான போக்குவரத்தில் பல்வேறு குறைபாடுகள் தொடர்சியாக இடம்பெற்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பெரிய பேருந்து
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 6:15 க்கு பருத்தித்துறையிலிருந்து கெவிலுக்கு செல்லும் கடைசி பேருந்து சேவைக்கு 54 ஆசனங்கள் கொண்ட பெரிய பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து காலை கேவிலிலிருந்து பாடசாலை சேவையாக காலை 7:40 மணியளவில் பருத்திதுறையை வந்தடையும்.இதனால் பயணிகள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.
இவ்வளவு காலமும் சிறிய பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan