உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி வாயிலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன்போது உக்ரைனுக்கான தனது ஆதரவை பைடன் மீண்டும் வலியுறுத்தினார்.

நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி
அத்துடன், உக்ரைனுக்கான வெற்றிக்கான பாதையைப் பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.
தான் தலைமை தளபதியுடன் "சிறந்த உரையாடலை" மேற்கொண்டதாகவும், தனது நாட்டின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஆக்கிரமிப்பாளர் மீதான வெற்றிக்கான எங்கள் பாதையில் உக்ரைனின் அடுத்த படிகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் விவாதித்தோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam