பைடனின் போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) முன்வைத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனிய அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் பைடனின் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
“இந்த திட்டம் சமாதானத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. சர்வதேசம் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். உடனடி போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பது ஹமாஸ் குழுக்கள் மாத்திரமே.
நீடித்த போர் நிறுத்தம்
மேலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, "ஹமாஸின் இராணுவம் மற்றும் ஆளும் திறன்களை அழிப்பது உட்பட, இஸ்ரேலின் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை போரைத் தொடர உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் திட்டத்தின் முடிவானது நீடித்த போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்காது.
மேலும் ஹமாஸால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |