இஸ்ரேலுக்கு திட்டமிட்ட 8 பில்லியன் டொலர் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட 8 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரசுக்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இதற்கு செனட் குழுக்களின் ஒப்புதல் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கும் இந்த ஆயுதங்களில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் அடங்குகின்றன.
ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலகுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிநவீன இராணுவங்கள்
இந்தநிலையில், காசாவில் நடந்த போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை காரணமாக இஸ்ரேலுக்கான இராணுவ ஆதரவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வொசிங்டன் நிராகரித்துள்ளது.

முன்னதாக, ஒகஸ்ட் மாதம், இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள போர் விமானங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. அத்துடன் உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன இராணுவங்களில் ஒன்றாக இஸ்ரேலிய இராணுவத்தை உருவாக்க அது உதவியுள்ளது.

ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தகவல்படி, 2019 மற்றும் 2023இற்கு இடையில் இஸ்ரேலின் முக்கிய வழக்கமான ஆயுத இறக்குமதியில் 69 வீதம் அமெரிக்காவை மையப்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan