வடகொரியாவுடன் நிபந்தனைகள் அற்ற பேச்சுவார்த்தை: தயாராகும் அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறியது,
“ஆசியாவில் சீன ஆதிக்கம், பசிபிக் தீவுகளுடனான உறவு, மற்றும் வட கொரியாவின் அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா, தென்கொரிய ஜனாதிபதி யூன்சுக் யியோல் ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
வடகொரியா இணக்கம்

இதற்கு பின் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடன் எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் , வடகொரிய ஜனாதிபதியை பல முறை சந்தித்து பேசியுள்ளார். எனினும் அவை தனிப்பட்ட முறையிலான சந்திப்புக்களாக காணப்பட்டன.
இந்நிலையில் தற்போது வட கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையே முக்கிய விடயமாக கருதப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு வடகொரியா தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்துவிட்டதாக வடகொரியா மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் பைடன், கிம்ஜோங் சந்தித்து பேசலாம் என கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri