பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சு நடவடிக்கை
வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் 2 1/2 Km தூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஜப்பானிடம் இருந்து சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ‘Child fund” வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பானிடம் இருந்து இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன.
மாணவர்களின் தினசரி வருகை
மேலும் தெரியவருகையில், தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.
இதற்காக, மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இடம்பற்ற நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.