கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமையைால் பயணிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
விமான சேவைகளுக்கு சிக்கல்
மஸ்கட்டிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோலாலம்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மற்றொரு விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
நாட்டின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.