இலங்கையில் பல தொடருந்து சேவைகள் இரத்து
சீரற்ற காலநிலை காரணமாக 12 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பதுளை இடையே நாளை (28) காலை இயக்க திட்டமிடப்பட்ட 12 தொடருந்து சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், தற்போது, ரம்புக்கனை வரை மட்டுமே தொடருந்து இயக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்து
அத்தோடு, தொடர் மழை காரணமாக மறு அறிவித்தல் வரை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாலும் கிழக்கு தொடருந்து மார்க்கத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படவில்லை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.