தியாக தீபம் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் (video)
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும், அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழக மாணவர்களால் இன்று (12.04.2023) குறித்த நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.ஜெல்சின், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் அபிரக்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னை பூபதியை நினைவேந்தியுள்ளனர்.
உலகம் பெண்ணியம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணியத்தை விஞ்சிய சக்தியைக்
காட்டிய அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம்
எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


















Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
