இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி
இலங்கையில் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் பிரபல தமிழ் ஊடகவியலாளருமான எம். இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக எம். முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக எம். டிலான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கட்சியை இலங்கையில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் இந்திரஜித் குறிப்பிட்டுள்ளார்.