மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்
மனோஜ் பாரதிராஜாவின் (Manoj Bharathiraja) இறுதிச் சடங்கில் அவரது மூத்த மகள் தனது தந்தைக்கான இறுதிச் சடங்கை சம்பிரதாயப்படி செய்தமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோஜின் சமுதாய வழக்கப்படி இறுதிச் சடங்கில் மூத்த ஆண் மகன் தான் பானையை தோளில் சுமந்து சுற்றி வருவது வழக்கம்.
ஆனால், மனோஜிற்கு ஆண் மகன் இல்லாத காரணத்தினால் அவரது மூத்த மகள் இறுதிச் சடங்கு செய்ய முன் வந்தார்.
ஆண் மகன் போல பானையை தோளில் சுமந்து தந்தையின் உடலை சுற்றி வந்து இறுதிச் சடங்கை நடத்தியது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
இறுதிச் சடங்கு
சமுதாய வழக்கப்படி மயானத்திற்கு பெண்கள் செல்ல மாட்டார்கள் என்ற போதிலும் அங்கு நடைபெற்ற அனைத்து சடங்குகளையும் பெண்களே முன்நின்று நடத்தியுள்ளனர்.
இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த (26) ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.
தனது ஆசைக்காக திரைப்படங்களை இயக்குவதிலும், தந்தையின் ஆசைக்காக படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்த மனோஜ், "வருஷமெல்லாம் வசந்தம்", "சமுத்திரம்", "அல்லி அர்ஜுனா", உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இரண்டாவது நாயகனாகவும், "தாஜ்மஹால்", "ஈர நிலம்", "சாதுர்யன்" உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், "மார்கழி திங்கள்" என்கிற படத்தை இயக்கியும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 1 மணி நேரம் முன்

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
