அமெரிக்காவில் பகவத்கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்
அமெரிக்காவில் பகவத்கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு நேற்றைய தினம் (04.07.2023) அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ்.கீதா அறக்கட்டளை அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் நடந்துள்ளதாகவும் இந்திய மைசூரு நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது.
ஆன்மீக தன்மை
சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கீதை உச்சரிப்பு நிகழ்ந்துள்ளது.
அவர்களில் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியைப் பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையைப் பரப்பும் நோக்கில் கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |