பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணை
பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளது.
இதன்படி நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையானது இவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு
கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் BMW ரக கார் நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இருந்து வாங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, BMW கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் மற்றும் அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது குறித்தும் சட்டவிரோத சொத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.
அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri