வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் யாழ் மற்றும் கண்டி மாணவிகளின் சாதனை
தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கண்டி, மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலை தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
உயர் தரத்திற்கு தகுதி
மேலும், மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில், இந்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 13,588 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

தனது அரசியல் பயணத்தை எவரும் தீர்மானிக்க முடியாது: விமலுக்கு ரணில் கொடுத்த பதிலடி - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
