தென்னிலங்கையில் திடீரென நிறம் மாறிய கடல் அலை: அச்சமடைந்த மக்கள்
வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் இன்று மாற்றமடைந்துள்ளது.
திடீரென கடல் அலைகள் கரும்பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர்.
இந்த திடீர் மாற்றத்தால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திடீர் மாற்றம் குறித்து நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகேவிடம் விளக்கம் கோரப்பட்டது.
கடல் அலைகள்
சமகாலத்தில் மழையுடன் காலநிலை நிலவுவதால், நீரோட்டங்கள் மாறி, பாசிகள் அதிகரித்தமையால் கடல் அலைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இது போன்ற நிலை உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.