லங்காசிறி செய்திக்கு பலன் கிட்டியது - கள்ளம்பத்தை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு(Video)
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அப்பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த லங்காசிறி ஊடக வலையமைப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கள்ளம்பத்தை மக்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள குடியமர்த்தப்பட்ட கள்ளம்பத்தை கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு நீரில்லாமல் மிகவும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
இதனையடுத்து லங்காசிறி வலையமைப்பின் சமூகப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் தேடுதலின் ஒரு அங்கமாக இக்கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதியுற்று வருவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் லங்காசிறி செய்தியை பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட நலன் புரிச்சங்கம் ஆறு குழாய் கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் குச்சவெளி நாவற்சோலை பகுதியிலுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ். குகதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இக்குடிநீர் பிரச்சினைக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி முருகன் கோயில் நிர்வாகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
