பெல்ஜியத்தில் அமைச்சர் பிமல் விசேட கலந்துரையாடல்
பெல்ஜியம் (belgium) எதிர்காலத்தில் இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு தேவையான தொழில்நுட்ப அறிவை பரிமாறிக் கொள்ளுவது தொடர்பில் இரு தரப்பும் ஒப்பந்தத்துக்கு வந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள இரு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இந்த நாட்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐரோப்பா பயணத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெல்ஜியத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Jean-Luc Crucke (ஷோ-லுக் க்ருக்) ஆகியோருக்கிடையில் கடந்த 23ஆம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அமைச்சில் நடைபெற்ற இந்த இருதரப்பு கலந்துரையாடலின்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் குறித்து பெல்ஜியத்தின் போக்குவரத்து அமைச்சர் Jean-Luc Crucke க்கு விளக்கமளித்ததுடன்,
அவற்றில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றியும் அறிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் பெல்ஜியத்தில் உள்ள இலங்கை தூதர் சந்தன வீரசேன உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

