இலங்கை மன்னன் இராவணன் பற்றிய ஆய்வுகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கையின் மன்னன் இராவணன் பற்றிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இராவணன் பற்றிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கோவிட் நிலைமைகளினால் இந்த ஆய்வுகள் கைவிடப்பட்டது.
எனினும் தற்பொழுது மீளவும் இராவண மன்னன் மற்றும் பண்டைய இலங்கையின் விமான போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.
இராவணன் உலகின் முதலாவது கைத்தேர்ந்த விமானி என இலங்கையர்கள் நம்புகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டைய இலங்கையில் விமானங்களும், விமான நிலையங்களும் பயன்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சிவில் விமான சேவை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கொழும்பில் ஒன்று கூடி இராவணன் தான் முதன் முதலில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் பயணம் செய்தான் என அறிவித்தனர்.
இராவணன் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்த்து. இராவணன் பற்றிய தகவல்கள் வெறும் கற்பனை கிடையாது எனவும், இது நிஜம் என்றே தாம் கருதுவதாகவும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் துணைத் தலைவர் ஷசி தனதுங்க தெரிவித்துள்ளார்.
இராவணன் பற்றிய ஆய்வுகளில் இலங்கையுடன்,இந்தியாவும் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென தனதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam