தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத யாசகர்கள் : மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை
மேல் மாகாணத்தில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாமல் நகரங்கள், வீதிகள், வீதி சமிக்ஞை விளக்குகள் இருக்கும் இடங்களில் சுற்றித் திரியும் யாசகர்களைப் பரிசோதித்து, கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் விசேட நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 541 யாசகர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவர்களில் தடுப்பூசிகள் எதனையும் செலுத்திக்கொள்ளாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 22 பேருக்கு நேற்றைய தினமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 55 பேருக்குத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளார்.



