தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் பெறுமதியான பீடி இலைகள் (video)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரையில் இன்று (21) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சோதனை
க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியின்போது கடற்கரையில் நின்ற மினி லாரியை சோதனையிட்டுள்ளனர்.
அதில், சுமார் 1½ டன் எடையுள்ள பீடி இலைகள் இருந்துள்ளது. இதையடுத்து மினி லாரி மற்றும் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் அதன் மதிப்பு 45 லட்சம் ஆகும்.
பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு
வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த
முயன்ற மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.







தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
