புத்தளத்தில் கடலில் மிதந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகள்
புத்தளம் (Puttalam) களப்பு பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பீடி இலைப் பொதிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது, பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று பொதிகளை சோதனைக்குற்படுத்தியுள்ளபோது குறித்த உறைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதில், 12 உறைகளில் இருந்து சுமார் 320 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |