சர்வதேசத்தின் உதவியை பெற நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும்-மல்வத்து மாநாயக்கர்
சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக முதலில் நிலையான அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சர்வதேசத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
கம்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று மாநாயக்க தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் கலைக்கப்படாது என்றே நினைக்கின்றோம்

தற்போதைய அரசாங்த்தை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு வரும் விதத்தை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எனினும் இந்த அரசாங்கம் இன்னும் குறுகிய காலத்திற்கு ஆட்சியில் இருக்கும் என்பதால், அரசாங்கம் கலைக்கப்பட மாட்டாது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.
நாட்டு மக்களுக்கு தற்போது பெரியளவில் பிரச்சினைகள் உள்ளன. பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கமத்தொழிலாளர்கள் தமது நெல்லை விற்பனை செய்ய முடியாது சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கமத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண வேண்டும்

அரச நெற் களஞ்சியங்கள் மூடப்பட்டுள்ளதாக நாங்கள் ஊடகங்கள் மூலம் அறிந்தோம். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையை தேடி அறிய வேண்டும். குறைந்தது கமத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளையோரின் பிரச்சனை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri