தோல்வியடைந்த நாடாக மாறிய இலங்கை: மாநாயக்க தேரர்கள் அதிருப்தி
அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான தீர்வை தேடுவதை புறந்தள்ளி விட்டு, வழமையான கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியுள்ளமை தொடர்பில் மாநாயக்க தேரர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நான்கு பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள்

மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர், அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட தம்மதஸ்சி தேரர், அமரபுர பௌத்த பீடத்தின் அதியுயர் மாநாயக்கர் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி தேரர், ராமஞ்ஞை பௌத்த பீடத்தின் மாநாயக்கர் ஸ்ரீ விமலஹிதான தேரர் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையை பாதுகாகக் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உண்மையான தீர்வை தேடுவதற்கு பதிலாக வழமைப்போல் கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரமும் நாடாளுமன்றமுமே நெருக்கடியின் பங்காளிகள்

இலங்கை ஏற்கனவே தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் என்பன இந்த நெருக்கடிகளின் பங்காளிகள்.
நாடாளுமன்றம் இணைந்து, நாட்டிற்குள் நடந்த மற்றும் நடக்கும் ஊழல், மோசடிகளை தடுத்து, சட்டத்தின் ஆளுமையை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்காததே நாட்டில் தற்போது உருவாகியுள்ள அராஜக நிலைமைக்கு காரணம் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது எனவும் மாநாயக்க தேரர்கள் அந்த கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan