ஒரு தசாப்தத்திற்கு பின் உலக உணவு விலை அதிகரிப்பு - ஐக்கிய நாடுகள் சபை
ஒரு தசாப்தத்திற்கு பின், கடந்த ஆண்டில் உலக உணவு விலை 30 வீதத்தினால் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தொிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இதனைக் கூறுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களின் விலை உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன.
அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 10% உயர்வை அடுத்து காய்கறி எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.
விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், உயர்ந்த பொருட்களின் விலைகள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் ஆகியவை விலை உயரக் காரணங்களாக இருந்துள்ளன.
கடந்த ஆண்டை விட தானியங்களின் விலை 22% உயர்ந்துள்ளது. கோதுமையின் விலை இந்த உயர்வுக்கு முக்கிய பங்களிப்பில் ஒன்றாக உள்ளது.
கடந்த 12 மாதங்களில் கனடா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய ஏற்றுமதி நாடுகளில் விளைச்சல் மோசமானதால், அதன் விலை 40% ஆல் அதிகரித்துள்ளது.
தானியங்களைப் பொறுத்த வரையில், பருவநிலை மாற்றம் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கர்டின் பிசினஸ் ஸ்கூலின் (Curtin Business School) விவசாய வணிக நிபுணர் பீட்டர் பேட் (Peter Batt) தெரிவித்துள்ளார்.
பாம் ஒயிலைப் பொறுத்தவரை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய வெற்றிடங்களால், மலேசியாவிலிருந்து உற்பத்தி குறைந்தது.
எனவே விலைகள் உயர்ந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வெற்றிடங்கள், உலகின் பிற பகுதிகளிலும் உணவு உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை அதிகரிக்க உதவுகிறது.
கடந்த ஆண்டை விட பால் பொருட்களின் விலை ஏறக்குறைய 16% அதிகரித்துள்ளன.
கப்பல் போக்குவரத்து தடைகளும் பால் விலையை உயர்த்தியுள்ளன.
