சுதந்திர தின நிகழ்வுகளுக்காக அலங்கரிக்கப்படும் மட்டக்களப்பு நகரம்
சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நாளை மறுதினம் 04.02.2024 மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
உணவுத் திருவிழா
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கத்தின் வழி நடாத்தலில் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடிப் பாலம் உள்ளிட்ட கல்லடி வரையிலான பிரதான வீதி உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு மின் குமிழ்களிலான அலங்கார வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சுதந்திரதினத்தன்று மாலை 6.30 மணிக்கு பழைய கல்லடி பாலத்தில் கடைத்தொகுதிகள் மற்றும் உணவுத் திருவிழா உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
