தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 12 பேர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 3 டிங்கி படகுகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
12 சந்தேக நபர்கள் கைது
சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri