போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த புதன்கிழமை சீலாமுனை பகுதியில் வைத்து தலா 210, 140, 180 மில்லிகிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.

இவர்களை 7 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று இவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் குறித்த போதை பொருள் வியாபரி தொடர்பாக தகவல்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து பொலிஸ் போதை தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மாறுவேடத்தில் புதிய எல்லை வீதியில் சம்பவதினத்தன்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்து வந்த இளைஞனை கண்ட பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்த வியாபாரியிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri