மட்டக்களப்பில் வாகன விபத்து: வயோதிபர் படுகாயம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (04.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு காயமடைந்த வயோதிபர் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் லொறியின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
