வியாழேந்திரன் மற்றும் பவித்திரா வன்னியாராச்சிக்கு இடையில் சந்திப்பு
மட்டக்களப்பில் குறிப்பாக கதிரவெளி தொடக்கம் காணப்படும் மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு காணிகளை எல்லைக் கற்கள் இட்டு வன இலாகாவிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி, அவற்றை மக்களுக்கு நிரந்தரமாக வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26.05.2023) அமைச்சில் நடைபெற்றது.
மக்களின் வாழ்வாதார காணிகள்
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார காணிகளை வனபாதுகாப்பு என்ற கருப்பொருளின் கீழ் வனஇலாகா முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
யுத்த காலங்களில் இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் தமது பகுதிக்கு சென்றுவாழும் போது கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்படுவதனால் வனஇலாகாவினர் அங்கு மக்கள் சென்று தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடுப்பது குறித்தும் அது தொடர்பில் விரைவான நடவடிக்கையினை முன்னெடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
எதிர்காலத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வாழ்வாதார மற்றும் குடியிருப்பு காணிகளை எல்லைக் கற்கள் இட்டு வன இலாகாக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி, அவற்றை மக்களுக்கு நிரந்தரமாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அது தொடர்பிலான சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
