வட கிழக்கில் பேரினவாத கட்சிகளை தடுக்கும் தொழில்நுட்ப ரீதியான தேர்தல் வியூகம் : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பேரினவாத கட்சிகள் தந்திர உபாயமான முறையில் எமது வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்றுக் கொள்வதை தடுத்துக் திறுத்தி, எமது தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டாக ஆட்சி அமைப்பதற்காகவும் எடுத்துக்கொண்ட ஒரு தந்திரோபாயமான தொழில்நுட்ப ரீதியான ஒரு தேர்தல் வியூகமே இது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நாம் மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமாக இருக்கின்றது. எனவே இந்த விருப்பத்தை தயவுசெய்து கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று (15.01.2023) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
தமிழரசு கட்சி மத்திய குழு தீர்மானம்
அண்மையில் எமது தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடி ஒரு தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.
அது முடிவான தீர்மானம் அல்ல, பங்காளி கட்சிகளோடு கூடி ஒரு தேர்தல் வியூகத்தை ஒழுங்காக அமைத்து இந்த தேர்தலில் முகம் கொடுக்க வேண்டும் என்று முடிவு தான் எடுக்கப்பட்டிருந்தது.
அந்த முடிவு என்பது உண்மையில் நாங்கள் நிரந்தரமாக பிரிந்து செல்கின்றோம் என்ற அர்த்தத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
அந்த முடிவானது எதிர் வருகின்ற தேர்தலில் நாங்கள் இவ்வாறு முகம் கொடுத்தால் அதிகப்படியே ஆசனங்களை தமிழ் தேசிய கட்சிகள் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு தான் அந்த முடிவு.
ஆசனங்கள் பற்றாக்குறை
கடந்த தேர்தலை பார்த்தோமானால் வட்டார ஆசனங்கள் அதிகமாக இருந்த போதும் கூட ஒரு வித்தியாசமான ஒரு பிரதிநிதித்துவம் காரணமாக முழுமையான ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய ஆசனங்கள் எங்களுக்கு பற்றாக்குறையாக இருந்தது இதனை தமிழரசு கட்சியும் அறியும்.
இப்பொழுது தனித்து போட்டியிட்டு பட்டா ஆசனங்களையும் கைப்பற்றி விகிதாசார ஆசனங்களையும் கைப்பற்றி தேர்தலுக்குப் பின் இணைந்து கொண்டால் அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற படிப்பினையை நாங்கள் பெற்றுக் கொண்டோம்.
நாம் முழுமையான பிரிவினை நோக்கத்துடன் அல்லாமல் எமது ஆட்சி பலத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழரசு கட்சி இந்த தேர்தலில் தனியாக முகம் கொடுக்கின்ற போது டெலோ அமைப்பு பிளட் அமைப்பு தனித்தனியாக அல்லது இரண்டும் இணைந்து போட்டியிடலாம் என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம்.
அந்த முடிவுக்கு அமைய நாம் தேர்தலில் பிரிந்து முகம் கொடுக்கின்றோம் நிரந்தரமானது அல்ல.
வடக்கு கிழக்கில் பேரினவாத கட்சிகள்
இது பேரினவாத கட்சிகளின் தந்திர உபாயமான முறையில் எமது வாக்குகளை வடக்கு கிழக்கில் அவர்களுடைய பேரினவாத கட்சிகள் பெற்றுக் கொள்வதை தடுத்துக் கொள்வதற்காகவும் எமது தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டாக ஆட்சி அமைப்பதற்காகவும் எடுத்துக்கொண்ட ஒரு தந்திரோபாயமான தொழில்நுட்ப ரீதியான ஒரு தேர்தல் வியூகமே இது என்பதை நாம் தட்டு தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
இந்த விடயத்தினை எமது சகோதரக் கட்சிகள் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து நாம் முற்றாக பிரிந்து விட்டோம் தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்றோம் அவர்கள் தமிழரசு கட்சியாக இருக்கின்றார்கள் என்றெல்லாம் பரப்புரைகளை செய்வது என்பது ஒரு வீணான ஒரு செயற்பாடாகும்.
நாம் மீண்டும் இணைய வேண்டும்
நாம் மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமாக இருக்கின்றது.
எனவே இந்த விருப்பத்தை தயவுசெய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.
உங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிரந்தரமான பகையை ஏற்படுத்தாமல் தோழமையோடு புரிந்துணர்வோடு உங்களுடைய பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும், அதனை விடு வார்த்தைகளை வீணாக கொட்டி விட வேண்டாம்.
எமது கட்சியினரிடம் நாம் தெரிவித்துள்ளோம் எமது தோழமை கட்சியினரை தாக்காமல் எங்களுடைய தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும்.
பேரினவாத கட்சிகள் பேரினவாத கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுகின்ற இவர்களை நாம் விமர்சிக்கின்ற தேவை இருக்கின்றது.
தமிழ் தேசிய பரப்பின் ஏனைய கட்சிகள்
டெலோ பிளட் போன்ற கட்சிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளை இணைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதனை நாம் குறையாக கருதவில்லை விக்னேஸ்வரன் கூட்டணி சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தா, டெலோவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தம் தங்களுடைய கட்சிக்குள் சேர்த்துக் கொள்கின்றார்கள்.
அனந்தியாக இருக்கலாம் ஆகவே இவர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சென்றவர்களை இணைத்துக் கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஜனநாயக போராளிகள் கட்சியும் கூட தமிழரசு கட்சியுடன் இணைவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
தந்துரோபயமான வியூகம்
எம்மை பொருத்தமட்டில் தேர்தல் வியூகத்திற்காக தொழில்நுட்ப ரீதியாக மீண்டும் பலமான சபைகளை அமைப்பதற்கு பேரினவாத கட்சிகளிடம் ஆசனத்திற்காக கெஞ்சி நிற்காமல் உறுதியான தமிழ் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இந்த தந்துரோபயமான வியூகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று சகோதர கட்சிகளுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்துகிறோம்.
ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று பல மாதங்களுக்குப் பின் இந்தியாவிற்கு செல்கின்றார்.
இந்தியா வரை ஆர்வமாக வரவேற்றது போல தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவர் செல்லத்தான் போகின்றார்.
இந்தியா இதில் கவனமாக கையாளப்பட வேண்டிய விடயம், மாகாண சபை முறைமையானது முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்தியாவிற்கு அவர் செல்லும் போது இந்தியா தன்னால் செய்யப்பட்ட ஒப்பந்தம் நிறைவுற்றப்படாமல் இருப்பது ஒரு வகையில் இந்தியாவை அவமதிக்கின்ற செயலாக இருக்கலாம்.
சமஸ்டி முறை மூலமாக இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இந்தியா மாகாண சபை தேர்தலை கட்டாயம் நடாத்த வலியுறுத்த வேண்டும். வடகிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முயல வேண்டும்.
யுத்த குற்ற செயல்கள்
மகிந்த ராஜபக்ச கோட்டாபாய ராஜபக்ச ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளது.
யுத்த குற்ற செயல்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக கனடா ஒரு முன்மாதிரியான செயல்பாட்டை செய்துள்ளது, இந்த செயற்பாடு ஆனது மனித உரிமை செயற்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மேற்குலக நாடு ஆதரவு தளத்தை கொடுக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
தமிழ் மக்களுக்கு இது ஒரு சிறு ஆறுதலையாவது கொடுக்கும்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பேச்சாளராக செயல்பட்ட ஆசாத் மௌலானா அவர்கள் மனித உரிமை ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று ஒரு நீண்ட சாசனத்தை வழங்கியுள்ளார்.
ஆசாத் மௌலானாவின் விளக்கம் இலங்கை புலனாய்வு பிரிவினுடன்
சேர்ந்து எங்களுடைய தமிழ் இனத்தின் கட்சியினரும் இணைந்து பல்வேறுபட்ட மனித
உரிமை மீறும் விடயங்களை செய்திருக்கின்றார்கள் என்பதை அப்பட்டமான முறையில் தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
