மட்டக்களப்பில் கராத்தே போட்டியில் இருபத்து ஆறு பதக்கங்களை சுவீகரித்து சாதனை
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை கௌரவிக்கும் வகையிலான நிகழ்வு இன்று பெற்றி கராத்தே கழகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
பெற்றி கராத்தே கழகத்தின் தலைவர் மதனின் தலைமையில் கீழ் பிரதான பயிற்றுவிப்பாளர் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பெற்றி கராத்தே கல்லூரியில் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் தேசிய விளையாட்டு நிகழ்வுக்கு இணைவாக மாவட்ட மட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
26பதக்கங்களை சுவீகரித்து சாதனை
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் சார்பில் 17 வீரர்கள் பல்வேறு ரக கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டதுடன் 26பதக்கங்களை சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் 16 தங்கப்பதக்கங்களும் நான்கு வெள்ளிப்பதக்கங்களும் 06 வெண்கல பதக்கங்களும்பெறப்பட்டுள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார்.
பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே கழகம் தொடர்ச்சியாக பல்வேறு தேசிய மட்ட
சாதனையாளர்களை உருவாக்கிவருவதாகவும் தொடர்ச்சியாக இரண்டு வீரர்கள் தேசிய
அணியில் சாதனை படைத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.