மட்டக்களப்பு ஸ்ரீபாலமுருகன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் ஆலய மஹா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இரண்டாம் நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
நேற்று முதல் பக்தர்கள் பாலமுருகன் சிவன் பார்வதி பால விநாயகர் நவக்கிரகம் பைரவர் சண்டேஸ்வரர் எண்ணொய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருவதுடன் இன்றும் பெருமளவாக பக்தர்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்குகொண்டுள்ளனர்.
சுபமுகூர்த்தவேளையில்
புதன்கிழமை சுபமுகூர்த்த வேளை மகாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
இவ் மகாகும்பாபிஷேகத்தினை பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு. தேவராசா குருக்களின் தலைமையிலான ஆச்சாரியர்கள் நடாத்துகின்றனர்.
இன்று காலை 9.15மணி தொடக்கம் 10.15மணி வரையான சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிசேகம் நடாத்தப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 மணி நேரம் முன்

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
