மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்துள்ளார்.
ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக நேற்று(09) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் சில பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட நபரையும், கசிப்பு உள்ளிட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri