மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு

Sri Lankan Tamils Batticaloa Hinduism Eastern Province
By Bavan Jun 26, 2024 04:00 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலயத்தின் அம்மன் பீடம் உள்ள காணியில் மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியமையால் இந்து மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாடானது ஆலய நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றினால் நேற்றைய தினம் (25.06.2024) முன்வைக்கப்பட்டுள்ளது. 

பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இந்த காணியை மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய நிர்வாகம் 50 வருடத்துக்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பில் இருந்து பாதுகாத்து ஆலய உற்சவ காலங்களில் புனித மஞ்சள் நீராடுதலும் கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு அம்மன் பீடம் அமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

காணி உரிமம்  

இந்த நிலையில், குறித்த காணியை மட்டு மாநகர ஆணையாளர் மாநகரசபைக்கு உட்பட்டது என போலியான ஆவணங்களை தயாரித்து, இந்த காணியை யாரோனும் பயன்படுத்துகின்றீர்களா என கிராமசேவகரிடமோ, பொது அமைப்புகளிடமோ, கிராம மக்களிடமோ கேட்டறியாது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி இந்து மக்களின் புனித தன்மையை இழிவுபடுத்தும் மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கப்பட்டது. 

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு | Batticaloa Shri Throwpathi Amman Temple Issue

அத்துடன் எந்த விதமான ஆவணங்களும் இன்றி மின்சாரம் குடிநீர் இணைப்பு வழங்கும் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர ஆணையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதேவேளை, கடந்த 13ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இருந்து இந்த காணிக்கான மின்சார இணைப்பு பெயரை மாற்றி தருமாறு மின்சார பொறியலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணைய தயாரில்லை: திட்டவட்டமாக கூறும் சஜித் தரப்பு

அரசாங்கத்துடன் இணைய தயாரில்லை: திட்டவட்டமாக கூறும் சஜித் தரப்பு

சுற்று நிருபம்

அத்துடன், காணி அமைச்சின் சுற்று நிருபத்தின் படி, "அரச காணியை அடாத்து செய்ய முடியாது. இந்த காணி பொதுமக்களின் நம்பிக்கை சொத்து. கிராம பொதுமக்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திலுள்ள எந்த அரச காணியையும் எவருக்கும் வழங்க முடியாது.

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு | Batticaloa Shri Throwpathi Amman Temple Issue

மேலும், அரச காணியை மீளப்பெறும் சட்டதின் கீழ் பிரதேச செயலாளர் அடாத்துகாரரை வெளியேற்ற வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 14 மற்றும் 12 உம் மீறப்பட்டுள்ளது என அறிய தருவதுடன் இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இக்காணி அபகரிப்பு தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம்  மூலமாகவும் நேரடியாகவும் சென்று தெரிவித்தோம் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவே, இந்த அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாட்டிற்கு தீர்வு பெற்றுதருமாறு கோரி செய்யப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகிய இரு நீதியரசர்கள்

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விலகிய இரு நீதியரசர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US