மட்டக்களப்பில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்(Video)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச பகுதியில் தற்போது பெய்யும் பலத்த மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி மற்றும் பாலையடிவட்டை – வெல்லாவெளி பிரதான வீதி ஆகியவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்வதனால் அவ்வீதியுடனான தரைவழிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
இந்நிலையில் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 128 குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்பொழுது பெய்து வரும் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருந்த பல நூற்றுக் கணக்கான நெற்செய்கைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியிலுள்ள வேத்துச்சேனை கிராம மக்கள் தொலைபேசி மூலமாக கிராம சேவகருக்கும், பிரதேச செயலாளருக்கும் அறிவித்ததற்கு அமைவாக பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் கிராம சேவை உத்தியோகஸ்த்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அனத்த முகாமைத்துவ உத்தியோகத்தர், என பலரும், நேரடியாக வள்ளத்தின் மூலம் அக்கிராமத்திற்குச் சென்று நிலமையைப் பார்வையிட்டனர்.

இதன்போது அங்குள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
128 குடும்பங்களைச் சேர்ந்த 538 பேர் கொண்டுள்ள அக்கிராமத்திற்கு அங்குள்ள உயர்ந்த நிலப்பகுதியில் பத்து மலசலகூடமும் பொது கட்டடமும் அமைப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என இதன்போது அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri