உயிருடன் விளையாடும் மட்டக்களப்பு புகையிரத திணைக்களம்: மக்கள் விசனம் தெரிவிப்பு(Photos)
மட்டக்களப்பு - கூழாவடி பகுதியில் உள்ள புகையிரதக் கடவை கடந்த சில வாரங்களாக திறந்த வண்ணமே காணப்படுவதால் பல விபத்துக்கள் மற்றும் மக்களின் உயிர் போகும் நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புகையிரத கடவையில் காவலராக இருப்பவர் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாகக் குறித்த கடவையில் திறந்த வண்ணமே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு புகையிரத திணைக்களம் குறித்த புகையிரதக் கடவைக்கு ஒரு காவலரை இதுவரைக்கும் நியமிக்காமை பல உயிர்களுடன் விளையாடும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
பாரிய விபத்தோ அல்லது மக்களின் உயிர்களையோ பழி எடுப்பதற்கு முன் உடனடியாக
கூழாவடி புகையிரத கடவைக்கு ஒரு காவலரை நியமிக்குமாறு அப்பிரதேச வாசிகளும்
அதன் ஊடக பயணம் செய்யும் மக்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri