புதுக்குடியிருப்பில் அன்று நடந்த அவலம்! சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் வாக்குமூலம்
மட்டக்களப்பு- புதுக்குடியிருப்பு படுகொலை இடம்பெற்று தற்போது 35 வருடங்கள்கடந்தாலும் அதற்கான நீதி இதுவரையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவிக்கையில், ஊர்காவல் படையினர் பலரை அவசர அவசரமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் விட்டு ஓடிவிட்டார்கள்.
இவர்களின் இந்த இனவெறிச் செயலினால் அன்றைய தினமே 17பேர் படுகொலை செய்யப்பட்டும் 10இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையிலும் மறுநாள் இருந்ததைக் கண்டோம்.
நான் தப்பிக்காமல் இருந்திருந்தால் அழைத்துச் செல்லப்பட்ட 45 பேரும் முதற்கட்டமாக படுகொலை செய்யப்பட்டு அடுத்த கட்டமாக இன்னும் ஊருக்குள் வந்து அடுத்தடுத்த கட்டங்களாக படுகொலை செய்திருப்பார்கள்.அந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




