மக்களுக்கான திட்டங்களை மக்களது காலடிக்கு கொண்டு சேர்க்கும் திட்டம்: வியாழேந்திரன் உறுதி
புதிய ஆண்டில் மக்களுக்கான விரிவான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று(01.01.2024) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலிமையான அரசியல் கட்டமைப்பு
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“மலர்ந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை இலங்கை திருநாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மட்டக்களப்பு மண்ணின் மக்களுக்கும் எங்களுடைய முற்போக்கு தமிழர் கழகம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த புதிய வருடம் 2024 எல்லோருக்கும் ஆரோக்கியமான ஒரு ஆண்டாக வளமான ஆண்டாக செழிப்பான ஆண்டாக அமைய வேண்டும்.
இம்முறை எம்மை பொறுத்த அளவுக்கு தமிழர் கழகத்தை பொறுத்த அளவுக்கு கிழக்கு மாகாணத்தில் எமது மக்களினுடைய இன இருப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசியல் பயணத்திலே ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக எமது மக்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும்.
நிச்சயமாக இந்த 2024 கடந்த வருடத்தைப் போல கடந்த காலங்களைப் போல எங்களுடைய மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களுக்கும் அபிவிருத்தி சார் விடயங்களுக்கும் கூடுதலான முன்னுரிமை வழங்கி எங்களுடைய முற்போக்கு தமிழர் கழகமும் நாங்களும் செயல்படுவோம் என்பதனை இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன்.
இந்த புதிய ஆண்டில் மக்களுக்கான விரிவான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நாட்டினுடைய ஜனாதிபதி பிரதமர் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுருக்கின்ற இந்த வேளையில் அது செயற்பாட்டு ரீதியாக வர வேண்டும்.
மக்களினுடைய சுமைகளை குறைப்பதாக அமைய வேண்டும் அதைத்தான் நாங்களும் கூடுதலாக இறங்கி வேலை செய்கின்றோம் அதுதான் நோக்கம் அந்த அடிப்படையில் தான் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கின்றேன் ”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |