வலது பக்கம் சிக்னலை ஏற்படுத்திவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர் தான் ஜனாதிபதி: சுமந்திரன் எம்.பி (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கம் சிக்னலை ஏற்படுத்திவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நேற்று (17) நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டம்
மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுவதையொட்டி தொகுதிக்கிளைகளின் கருத்துகளை பெறுவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு கோரும் வகையிலான கூட்டமாக நடைபெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
