தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் மட்டக்களப்பு வீரர் சாதனை (Photo)
வடக்கு கிழக்கின் வரலாற்றில் முதன் முறையாக தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் மட்டக்களப்பு வீரர் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட மட்டக்களப்பினை சேர்ந்த துஷியந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
ஆறாவது தெற்காசிய குமித்தே கராத்தே சுற்றுப்போட்டி இலங்கையில் நடைபெற்றது.

வெள்ளிப்பதக்கம்
இதில் இந்தியா, பூட்டான், பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாள், இலங்கை ஆகிய ஆறு நாடுகள் பங்குகொண்டன.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் சார்பில் பங்குகொண்ட துஸ்யந்தன் 55 கிலோவுக்குட்பட்ட 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளிப்பத்தக்கதை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கௌரவிக்கும் நிகழ்வு
தேசிய ரீதியில் இடம்பெற்ற 20 வயது பிரிவினருக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டியில் 2 வது இடத்தை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், 2021ஆம் ஆண்டு இடம் பெற்ற சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களையும், ரோல் போல் போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று (29.11.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலையில் சாதனைப்படைத்த மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களும் நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan