சீரற்ற காலநிலை! மட்டக்களப்பில் பெண்ணொருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.
சடலம் மீட்பு
நேற்று மாலை பெரியகல்லாறிலிருந்து 40ஆம் கிராமத்திற்கு பேருந்தில் வந்திறங்கி மயான வீதியால் நடந்துசென்றுகொண்டிருக்கும்போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலையே அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன்காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது
தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
