மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு(VIDEO)
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநகரசபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடு செய்வதை தடுக்கக்கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று( 11.11.2021) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பாக மேலதிகமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட
ஆட்சேபனைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முதல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும்
எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக
உத்தரவிட்டார்.






கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri